Prayer Meeting

சீடத்துவம்

கர்த்தரை பின்பற்றும்படியாகவும், கர்த்தருக்கும் அவருடைய இராச்சியத்துக்கும் ஊழியம் செய்யும்படியாகவும், திருச்சபையின் ஊழியங்களை பொறுப்புக்களை செய்யும்படியான பயற்சிகளை அறிவைக்கொடுக்கும்படியாகவும் சீடத்துவ வகுப் புக்கள் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை மாலை இடம்பெறுகிறது. தகுதியுள்ள வர்ககளுக்காகவும் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் சீடத்துவ வகுப்புக்களும் நடத் தப்படுகிறது. குறிப்பாக பரிசுத்தவேதாகமத்தின்படியான இறையியல் அறிவையும், ஊழியர்களுக்கான தகுதிகள் திறமைகளையும், ஊழியங்கள் செய்யப்படவேண்டிய முறைமைகளையும் கற்றுக்கொடுக்கினற வகுப்புக்களாக சீடத்துவ வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

மிஷனரிப்பணிகள்

சகல ஜாதிகளுக்கும், பூமியின் கடைசிப்பரியந்தமும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கிற பணிகளை செய்கிறோம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒத்த கருத்துள்ள சபைகளை எங்கள் திருச்சபையின் மிஷனரிக் குடும்ப த்தில் இணைத்துள்ளோம். எங்கள் மிஷனிக்குடும்பத்திலுள்ள எல்லா சபைகளுக் கும் ஜெப உதவிகள் வழங்கப்படுவதுடன். சில சபைகளுக்கு எங்கள் தகுதிக்கே ற்றவாறு நிதியுதவிகள் செய்யப்பட்டுவருகிறது.

சுவிசேஷப்பணி

சகலரையும் கர்த்;தருக்கு சீஷராக்கும்படி, இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்துக்கு ஏதுவான அறிவைக்கொடுக்கும்படி, பாவத்திலிருந்து மனந்திரும்பி பாவமன்னிப்பை நித்தியஜுவனை பெற்றுக்கொள்ளும்படி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பது. இச்சுவிசேஷப்பணியை அயலிலுள்ள வீடுகளை சந்திப்படுக்கூடாக, தனிப்பட்ட நட் புக்களுக்கூடாக, வானொலி நிகழ்சிக்கூடாக, துண்டுப்பிசுரங்கள், விநியோகிப்பது க்கூடாக வாரத்தோறும் செய்யப்பட்டுவருகிறது.